கஞ்சா பற்றி நகராட்சி கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர்.. அடுத்த நொடியே எழுந்து நன்றி கூறிய அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு.!!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2024, 4:37 pm
dmk admk councilir
Quick Share

கஞ்சா பற்றி நகராட்சி கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர்.. அடுத்த நொடியே எழுந்து நன்றி கூறிய அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு.!!

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் விழுப்புரம் நகரத்தில் உள்ள 42 வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டு விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் மின்விளக்கு , சாலை அமைக்கும் பணி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினர்.

அப்பொழுது 36-வது வார்டு திமுக கவுன்சிலர் மணவாளன் எங்கள் பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் கஞ்சா மற்றும் குடித்துவிட்டு இளைஞர்கள் அட்டகாசம் செய்வதாக கூறினார்.

உடனே அதிமுக பெண் கவுன்சிலர் ராதிகா செந்தில்குமார் திமுக கவுன்சிலர் இந்த விழுப்புரம் நகரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவு இருக்கிறது என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.

உடனே திமுக கவுன்சிலர்கள் எழுந்து அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தெரு விளக்கு போடுவதற்கு டெண்டர் எடுத்த நபரிடம் கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான கேள்வி கேட்டனர் இதற்கு டெண்டர் எடுத்தவர் இதையெல்லாம் இங்கே பேசக்கூடாது என்று கூறியதால் திமுக கவுன்சிலர்கள் கோபமடைந்து மிரட்டியபடி இவருடைய டெண்டரை நிறுத்துமாறு கூறி நகர மன்ற தலைவி தமிழ்ச்செல்வி இடம் கோரிக்கை வைத்தனர். இதனால் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Views: - 227

0

0