“பிக்கப்“ வேனை “பிக்கப்“ செய்த யானை : ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக “எஸ்கேப்“!!

By: Udayachandran
7 October 2020, 6:48 pm
Elepahnt Attack- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வன சாலையில் இரவு நேரங்களில் குட்டிகளோடு வந்த யானை பிக்கப் வேன்ன் ஒன்றை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை உட்கொள்வதும் சாலையைக் கடப்பது வாடிக்கையாகி வருகின்றது.

நேற்று இரவு குட்டிகளோடு நின்றுகொண்டிருந்த ஒற்றை யானை சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடி நோக்கி ஆசனூர் வனச் சாலையில் வந்த பிக்கப் வேனை வழிமறித்து தும்பிக்கையால் தள்ளியபடி துரத்தி உள்ளது.

இதனால் பயந்த வாகன ஓட்டுநர் இடதுபுறமாக இறங்கி தலைதெறிக்க ஓடி உள்ளார் இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக ஆசனுர் வழிச் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 44

0

0