எல். முருகன் சொன்னது சரிதான்… அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையும் திமுக முகம்!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2025, 2:06 pm
2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தடல களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
திமுக மறுபடியும் ஆட்சி அமைக்க தீவிரமாக வியூகம் அமைத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை அமைத்து இந்து முறை நாங்கள் தான் ஆட்சியில் அமரப் போகிறோம் என இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பேசி வருகிறார்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அடுத்தடுத்து என்ன நடக்கும் என ஒரு பெரிய பஞ்சாயத்தே போய்க் கொண்டிருக்கிறது. தேமுதிகவும் தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக சொல்லவில்லை.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஒவ்வொரு முறையும் 2026ல் தவெகதான் ஆட்சி கட்டிலில் அமரும் என கூறி வருகிறார். நேற்று நடந்த மாநாட்டில் விஜய் பேச்சு திமுக, பாஜக, அதிமுக இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தனது கூட்டணியை நம்பித்தான் உள்ளது. கூட்டணி உடையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கூட்டணியில் இருந்து யாரும் விலகப்போவது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க, இன்று நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக நெல்லை வரும் அமித்ஷா, நயினார் நாகேந்திரன் வீட்டில் ஆலோசனை நடத்துகிறார். பூத் கமிட்டி மாநாட்டின் போது திமுகவின் முகமான கேஎஸ் ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக பிரமுகர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக எல் முருகன் கூறியிருந்தார். அது போல கேஎஸ் ராதாகிருஷ்ணன் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் அண்மையில் காங்., தலைவர் மல்லகார்ஜூன கார்கேவை விமர்சித்தற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
