கல்குவாரிக்கு எதிர்ப்பு… 7வது நாளாக தனியாளாக போராடிய விவசாயிக்கு திடீரென குவிந்த ஆதரவு : ஒன்று சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள்.. தர்ணாவால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 6:23 pm
Farmer Protest - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் சட்டவிதிகளை மீறி இயங்கும் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 7-வது நாளாக விவசாயி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்திற்க 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கல்குவாரியை மூடக்கோரி விவசாயி விஜயகுமார் என்பவர் தனி ஒருவராக ஏழாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விவசாயிக்கு ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்து கல்குவாரிக்குள் குதித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றதில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.


இதனால் விவசாயிகள் கல்குவாரிக்குள் குதித்து போராட்டத்தில் ஈடுபட, உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் பகுதியில் இருந்து கல்குவாரியை நோக்கி புறப்பட்டபோது, போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் கல்குவாரிக்கு நுழைய முற்பட்டபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்குவாரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட விவசாயிகள் 100 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்த கல்குவாரியை மூடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Views: - 805

0

0