பெற்ற குழந்தையை கொலை செய்த தந்தை: மனைவியின் மீதான வெறுப்பால் ஏற்பட்ட விபரீதம்..!!!

Author: Aarthi
8 October 2020, 5:43 pm
Crime_updateNews360
Quick Share

மதுரை: மனைவியின் மீது இருந்த கோபத்தில் 2 வயது குழந்தையை தந்தையே கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

மேலூர் அருகே உள்ள எஸ்.கோவில்பட்டியை சேர்ந்தவர் சத்தியபிரபு. லாரி ஓட்டுனரான சத்தியபிரபு, 4 ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் சத்தியபிரபுவின் வீட்டில் வசித்துவந்தனர். இவர்களுக்கு ஆராதனா என்ற 2 வயது பெண்குழந்தை உள்ளது. சத்தியபிரபு மதுவுக்கு அடிமையானதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

crime-arrest-updatenews360

இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டால் நிவேதா, தன் தந்தை வீட்டிற்கு செல்வதும், பின் சமரசம் பேசி அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் குழந்தையை தூக்கிக் கொண்டு வழக்கம் போல தனது அப்பா வீட்டுக்கு செல்ல முயன்றுள்ளார் நிவேதா. ஆனால், சத்தியபிரபு குழந்தையை தர மறுத்ததால் நிவேதா மட்டும் தனியே சிவகங்கைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், குழந்தை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சத்தியபிரவு தெரிவித்துள்ளார். மேல் சிகிச்சைக்க்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஆராதனா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, தன் கணவன் தான் குழந்தையை கொன்றுவிட்டதாக நிவேதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், மனைவியை வர வைப்பதற்காக, குழந்தையுடன் தானும் விஷமருந்தியதாக சத்தியபிரபு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 52

0

0