நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அறிவிப்பு..!!

19 January 2021, 12:07 pm
voter list - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பர் 16ம் தேதி துவக்கப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நவம்பர், டிசம்பரில் தலா, இரண்டு நாட்கள் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஒரு மாதம் நடந்த வாக்காளர் திருத்தப் பணியின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 20.99 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் நீக்கம் கோரி 4.43 லட்சம் விண்ணப்பங்களும், திருத்தம் கோரி, 3.36 லட்சம் விண்ணப்பமும், முகவரி மாற்றம் கோரி 1.88 லட்சம் விண்ணப்பங்கள் என மொத்தமாக, 30.68 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்கள் குறித்து பரிசீலித்து, தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, டிசம்பர் 15ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. தற்போது, பணிகள் முடிந்துள்ள நிலையில், நாளை அனைத்து மாவட்டங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Views: - 0

0

0