தமிழ்நாட்டில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதே முதல் நோக்கம் : செல்வப்பெருந்தகை சபதம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 June 2025, 10:43 am
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளையபெருமாள் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை , திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது குறித்தும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது :-இந்த தேசம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது ஆங்கிலம் பேசக்கூடாது என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார் என்றால் இந்த திமிர் எங்கிருந்து வந்தது?
ஆங்கிலம் பேசக்கூடாது என்றால் ஒன்றிய அமைச்சர்களின் குழந்தைகள் அவர்கள் வீட்டின் பெண்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு வெளிநாடுகளிலே ஆங்கில பள்ளிகள் பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள்.
அப்படி என்றால் விளிம்பு நிலை மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளக் கூடாது என்கிற நிலையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டுள்ளது.
இதையெல்லாம் சீர்தூக்கி பார்க்க வேண்டிய உள்ளது. தமிழக மக்களின் வியர்வை மற்றும் ரத்தத்தை சிந்திய வரிப்பணத்தை கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள்.
அடாவடித்தனம் செய்கிறார்கள் மிகப்பெரிய இயற்கை பேரிடர் வந்தால் அதற்குரிய பேரிடர் நிதியை தாருங்கள் என்றால் அதையும் கொடுக்க மறுக்கிறார்கள்.
இந்தியாவிலேயே மூன்றாவது மிகப்பெரிய வரி செலுத்தும் மாநிலம் தமிழகம் இந்தியாவிலேயே மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதும் தமிழகம் தான் இப்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழகம் வழிகாட்டி கொண்டுள்ளது.
ஆனால் ஒன்றிய பாஜக அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது தமிழகத்தை குறிவைத்து தாக்குகிறது . இப்பொழுது முருகனை ஹய்ஜாக் செய்ய முயல்கிறார்கள் இதனால் முருகனை காப்பாற்ற வேண்டிய சூழலில் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அயோத்தி போனால் ராமர் ராமஜென்ம பூமி அது தோல்வி அடைந்ததால் ஜெய் ஜெகநாதர் அவரும் ஆதரவு கொடுக்காததால் பூரி ஜெகநாதர். இப்படி மாறி மாறி மதத்தை வைத்து இந்தியாவை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் எத்தனை தொகுதிகள் யார் யாரை ஏமாற்றுவது என பேசிக்கொண்டு இருக்க நேரமில்லை இப்பொழுது நமது ஒரே எதிரி பாஜகவை வீழ்த்துவது தான். இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டும், மக்களை காக்க வேண்டும்.
தமிழக மக்களின் ஏற்றத்தில் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது எனவே தமிழகத்திலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும். இந்த நேரத்தில் இதையெல்லாம் பேசுவது நாங்கள் இல்லை நாங்கள் பேச மாட்டோம் எத்தனை தொகுதி என்பதை எங்கள் அகில இந்திய தலைமை முடிவு செய்து எங்கள் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது ஆகவே எங்கள் கூட்டணி அதனை முடிவு செய்யும்.
மதவாத சக்திகளை எதிர்க்கிறோம் பாஜகவை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை. அதனை எங்கள் அகில இந்திய தலைமை ஏற்காது இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. நாங்கள் தெளிவாக உள்ளோம் இந்தியா கூட்டணி வலுவானது இது காலத்தின் கட்டாயம் மிக மிக அவசியமானது.
எடப்பாடி பழனிசாமியின் முதல் தேர்தல் அறிக்கை அமைதியான தமிழகம் என்பது குறித்த கேள்விக்கு அவர்கள் ஆட்சியின் போது தான் தூத்துக்குடியில் ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது நவீன துப்பாக்கிகள் கொண்டு அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது.
தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என அவர் கூறினார் அப்பொழுது அமைதி இருந்ததா சாத்தான்குளத்திலே இருவரை அடித்துக் கொன்றார்களே அப்பொழுது அமைதி இருந்ததா என கேள்வி எழுப்பினார்.
எத்தனை வன்முறைகள் எத்தனை படிகலைகள் ஆகவே எந்த ஆட்சி வந்தாலும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆகவே மக்களுக்கு பொருப்பு இருக்கனும் எதிர் கட்சிகளுக்கும் பொறுப்பிற்கு ஆளுங்கட்சிக்கும் பொறுப்பு இருக்கிறது எந்த பிரச்சனை வந்தாலும் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்