2021ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் : ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது!!

2 February 2021, 9:06 am
TN Assembly Meeting- Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

2021ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கொரோனா சூழல் காரணமாக கடந்த முறை சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிலையில் இந்த முறையும் கூட்டம் அங்கு நடைபெறுகிறது.

2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அவர் ஆங்கிலத்தில் உரை நிகர்த்துவார், அதை சபாநாயகர் தனபால் தமிழில் மொழி பெயர்த்து கூறுவார்.

மேலும் கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் பேரளிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் வேளாண் சட்டம் குறித்தும், விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.

Views: - 33

0

0