ஒரு வருடம் காத்திருந்து திமுக கவுன்சிலரைக் கொன்ற கும்பல் : நண்பனை கொன்றதற்கு பழிக்கு பழி!!

15 April 2021, 5:20 pm
DMK councilor Murder -Updatenews360
Quick Share

விருதுநகர் : இராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டி படுகொலை நண்பனின் படுகொலைக்கு ஓராண்டு காத்திருந்து நண்பர்கள் பழிதீர்த்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு நிலவிய நிலையில் கிருஷ்ணாபுரம் தெப்பகுளம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என தகவல் அறிந்து காவல்துறை விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்

விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் என்பவரும் அவரது மகன் உட்பட 6 பேர் சேர்ந்து தாமரைக்கனி என்ற இளைஞனை கொலை செய்தது தெரியவந்தது கொலைக்கான காரணம் அப்பொழுது விசாரித்தபோது திருமண வீட்டில் ட்ரம்செட் அடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை என கூறப்பட்டது. இருப்பினும் கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் அந்த கொலை நடந்ததாக பின்பு தெரியவந்தது

இறந்துபோன தாமரைக்கனி என்பவர் மாநில அளவிலான கபடி வீரர் இவருக்கு அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் மட்டுமல்லாமல் இராஜபாளையம் நகரம் மற்றும் வெளியூர் என பல பகுதியில் நண்பர்களும் அதிகம் இருந்த நிலையில் தாமரைக்கனி கடந்த ஆண்டு எப்ரல் மாதம் 7ம்தேதி கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் உட்பட 6 பேர் கைது செய்து சிறையில் இருந்தனர். பின்பு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து அண்ணாமலை ஈஸ்வரன் தனது உயிருக்கு ஆபத்து இருக்கும் என்று பயத்தில் நாகர்கோவிலில் தங்கி வசித்து வந்துள்ளார்.

நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் சொந்த ஊரான கிருஷ்ணாபுரம் பகுதிக்கு வந்தவர் சேத்தூர் பகுதியில் உள்ள கரையடி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது,

இருப்பினும் எதிர் தரப்பினரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் எட்டிய நிலையில் அண்ணாமலை ஈஸ்வரனை தாமரைக்கனியின் நண்பர்கள், தன் நண்பன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் குழந்தைவேல் குமார், மதியழகன், ஜெகதீஸ்வரன் ஆகிய 3 பேரும் அண்ணாமலை ஈஸ்வரனை சரமாரியாக வெட்டி சாய்த்ததில் அண்ணாமலை ஈஸ்வரன் சம்பவ இடத்திலே பலியானார்

கொலைச் சம்பவம் குறித்து இராஜபாளையம் துணைக் கண்காணிப்பாளராக சங்கர் தலைமையில் சேத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்டமாக இந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவருடன் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்

தன் நண்பனின் கொலைக்கு பழி தீர்க்கும் நோக்கத்தில் கடந்த ஓராண்டு காத்திருந்து பழி தீர்த்த நண்பர்கள் இந்த பழிக்கு பழி கொலையினால் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு விதமான பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது

Views: - 35

0

0