சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2025, 11:19 am

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் மாலதி. இவர் காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளி மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டுக்கு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார் . பின்னர் பள்ளி மாணவி தனது வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையும் படியுங்க : மகள் சாவதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த குடும்பத்தினர்.. தஞ்சையில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

இதனைத் தொடர்ந்து பள்ளி மனைவியை பெற்றோர்கள் ஆட்டோவில் மீட்டு எப்போதும் வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லை 108 ஆம்புலன்ஸ் இல்லை பள்ளி மாணவியை ஆட்டோவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக பள்ளி மாணவி மாலதி உயிரிழந்தார்.

The girl died of suffocation after eating rice

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பள்ளி மாணவி உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது பள்ளி மாணவி அதிகமாக அரிசி சாப்பிட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்…

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!