‘தாத்தாவை‘ பார்க்க லண்டனில் இருந்து சென்னை வந்த சிறுமி : 6 வருடங்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

20 November 2020, 5:09 pm
Child Harrassment - Updatenews360
Quick Share

சென்னை : லண்டனில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னையை சேர்ந்த முதியவரை 6 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

சென்னையை பூர்விகமாக கொண்ட சாந்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். இவரது இளைய மகளான 17வயது சிறுமி லண்டனில் படித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக மன அழுத்தமாக காணப்பட்ட சிறுமியை, பெற்றோர் மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர். மேலும் உளவியல் நிபுணர்கள் ஆலோசனைக்கு சிறுமியை உட்படுத்தினர்.

அப்போது அவர் படித்த பள்ளியில் உளவியல் சார்ந்த கவுன்சிலிங்கின் போது சிறுமி கூறிய தகவல்களை கேட்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சிறுமி விடுமுறைக்காக சென்னை அண்ணா நகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்ததுள்ளார்.

அப்போது சிறுமியின் உறவினரான 68 வயது முதியவர் ஒருவர் சிறுமியை தனியாக அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி மன அழுத்தத்திற்கு ஆளாகி மனரீதியாக கடந்த 6 ஆண்டுகளாக சித்ரவதை அனுபவத்துள்ளார்.

இதனால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்த தகவலை உளவியல் மூலமாக அறிந்து கொண்ட ஆசிரியர் சிறுமியின் பெற்றோரை அழைத்து கூறியுள்ளனர். அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஆன்லைன் மூலமாக கடந்த 11ஆம் தேதி புகார் அளித்தனர்.

இதையடுத்து இந்த புகாரை திருமங்கலம் காவல்துறையினர் ஏற்று விசாரணை நடத்தினர். பின்னர் உண்மை உறுதி செய்யப்பட்டதால் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். லண்டன் சிறுமிக்கு கொடுத்த பாலியல் தொந்தரவால் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதியவர் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 30

0

0