நெல்லை திருமலை நம்பி கோவிலில் கனமழையால் தரைப்பாலம் மூழ்கியது : வெள்ளத்தில் சிக்கித் தவித்த பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 5:49 pm
Temple Flood - Updatenews360
Quick Share

நெல்லை : திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டத்தில் சிக்கி தவித்த பக்தர்கள் மீட்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. தமிழக அரசு வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ள நிலையில் நேற்று முதல் பக்தர்கள் நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடைசி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். இந்த நிலையில் மலையில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கி தவித்தனர்.

தீயணைப்பு துறையினர்,வனத்துறையினர் , காவலர்கள் உதவியுடன் பக்தர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு சிக்கிய பக்தர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

Views: - 174

0

0