கனமழையால் தரைமட்டமான தரைப்பாலம்.! பரிசலில் பயணம் செய்த மக்கள்.!!
10 August 2020, 12:38 pmகோவை : சிறுமுகை அருகே காந்தையார் பாலம் தண்ணீரில் மூழ்கியது கிராம மக்கள் பரிசலில் சென்று வருகின்றனர். உயர்மட்ட பாலம் கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்
பவானிசாகர் நீர் தேக்க பகுதிகளான கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வரை உள்ளது. நீர்த்தக்க பகுதி வழியாக லிங்கா புரத்தில் இருந்து காந்தவயலுக்கு செல்ல சாலை உள்ளது இந்த சாலையின் குறுக்கே காந்தையாறு குறுக்கிடுவதால் அங்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது.
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 95 அடியை தாண்டி விட்டால் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும் தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிவிட்டது இதன் காரணமாக காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கி பாலத்தின் மீது 3 அடி வரை தண்ணீர் நிற்கிறது இதனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயலுக்கு செல்லும் சாலை மூடப்பட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக காந்தவயல் மொக்கை மேடு உளியூர் ஆளுர் காந்தையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாலத்தின் மீது மூன்று அடி மேல் தண்ணீர் நிற்பதனால் அவ்வழியாக பாலத்தை கடக்க பரிசல் மூலம் செல்லக்கூடிய கட்டாயம் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் தற்போது அங்கு பரிசு பயணமும் தொடங்கிவிட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் : லிங்காபுரத்தில் இருந்து காந்தவயலுக்கு காந்தவயலில் இருந்து லிங்காபுரத்துக்கும் செல்ல பரிசலை மட்டுமே நம்பி உள்ளோம் ஒரு நபருக்கு ஐந்து ரூபாயும் இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயாகவும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது 100 மீட்டர் தூரம் தண்ணீரில் பரிசலில பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு விரைவில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.