வெடி மருந்தை கடித்த வேட்டை நாய் முகம் சிதறி பலி : விலங்குகளை வேட்டையாடும் கும்பலுக்கு வலை!!

11 October 2020, 5:38 pm
Dog Dead - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே வெடி மருந்தை கடித்த வேட்டை நாய் முகம் சிதறி பரிதாபமாக உயிரிழந்தது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அதிகளவு மானவாரி நிலங்கள் மற்றும் சீமை கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுவதால் விவசாயிகள், கொடிய விலங்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக அதிகளவில் வேட்டை நாய்களை வளர்த்து வருகின்றனர்.

30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் மதிப்புள்ள பல்வேறு இன நாய்கள் இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளாத்திகுளம் அருகேயுள்ள கூத்தலூரணி கிராமத்தில் தரையில் கிடந்த விலங்குகள் வேட்டையாட பயன்படுத்த படும் வெடி மருந்தை கடித்த வேட்டை நாய் ஒன்று கடித்துள்ளது.

அப்போது பயங்க சத்ததுடன் வெடி மருந்து வெடித்துள்ளது.இதில் முகம் சிதறி வேட்டைநாய் பரிதாபமாக உயிர் இழந்தது. இதன் மதிப்பு 50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. நாய் முகம் சிதறி உயிரிழந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளாத்திகுளம் பகுதியில் முயல், மயில், நரி மற்றும் மான்களை சில கும்பல்கள் வெடிமருந்தினை பயன்படுத்தி வேட்டையாடி வருவதாகவும், அதில் தவற விட்ட வெடிமருந்தினை கடித்து தான் வேட்டை நாய் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே வனத்துறையினர் மற்றும் போலீசார் உரிய விசாரணை நடத்தி வெடி மருந்து வைத்து விலங்குகளை வேட்டையாடும் கும்பல்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 7

0

0