கோவையில் குறைய தொடங்கியது கொரோனா தாக்கம்..!

Author: Udayaraman
7 October 2020, 9:26 pm
Cbe Corona- updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 473 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த ஒருவாரமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் கீழாக குறைந்துள்ளது. அதன்படி சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை ரத்தினபுரி, ராமநாதபுரம், பீளமேடு, சுந்தராபுரம், காந்திபுரம், உக்கடம், அன்னூர், பொள்ளாச்சி, சூலூர், காரமடை, மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 473 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 479 ஆக உயர்ந்துள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 74 வயது மூதாட்டி, 61, 73 வயது முதியவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 73 வயது முதியவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 50 வயது ஆண் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 476 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 369 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 30 ஆயிரத்து 62 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 941 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 39

0

0