மதியிழக்க செய்த சொத்து மோகம்..மகன்களால் தந்தைக்கு நேர்ந்த சோகம்..!!!

Author: Aarthi
6 October 2020, 5:00 pm
landissue - updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே நிலத்தகராறில் பெரியாப்பாவை மகன்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ரிஷிவந்தியம் அருகே முனிவாழை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு வின் மகன் ஏழுமலை மற்றும் அவரது தம்பி சிங்காரவேலன் ஆகியோருக்கு சொந்தமாக 5 சென்ட் நிலம் இருந்துள்ளது.

5 சென்ட் நிலத்தை பாதியாக பிரித்து சிங்காரவேல் தமக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டியுள்ளார். தற்போது ஏழுமலை அவருக்கு சொந்தமான பங்கில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் சிங்காரவேலன் மகன்கள் ஹரிகிருஷ்ணன்(33), ராஜசேகர்(29) ஆகிய இருவரும் ஏழுமலை வீடுகட் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இது சம்பந்தமாக ஹரிகிருஷ்ணன், ராஜசேகர் மற்றும் ஏழுமலை மூவருக்கும் இடையே நேற்று நண்பகல் 2 மணி அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அண்ணன் தம்பி இருவரும் பெரியப்பாவான ஏழுமலையை அடித்து கீழே தள்ளியுள்ளனர். பின் தலையில் அடிபட்ட ஏழுமலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தலையில் பின்பகுதியில் வீக்கம் அதிகமாக உள்ளதால் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏழுமலையை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏழுமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஹரிகிருஷ்ணன் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறில் பெரியாப்பாவை தம்பியின் மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 46

0

0