தண்டவாளம் அருகே பாமக மகளிரணி தலைவி சடலம் கிடந்த விவகாரம் : விசாரணையில் சிக்கிய ஆண் நண்பர்!! அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2023, 7:52 pm

தென்காசி : சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்தையா-சண்முகத்தாய் (70) தம்பதி. இவர்களது மகள் மாரியம்மாள். மாரியம்மாள் குருவிகுளம் யூனியன் பாமக மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார்.

மாரியம்மாள் கணவரை விட்டு பிரிந்து ரெங்கசமுத்திரத்தில் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்தபோது மாரியம்மாள் வீடு பூட்டி இருந்தது.

நீண்ட நேரமாக மாரியம்மாள் வீடு பூட்டியே இருந்ததால் அக்கபக்கத்தினர் அவரது தாய்க்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது மாரியம்மாள் என்பது உறுதியானது. மேலும் அவரது உடல் அருகே அவரது இருசக்கர வாகனமும் நின்றது.

இதையடுத்து மாரியம்மாள் சாவில் மர்மம் இருப்பதாக சண்முகத்தாய் சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

புளியம்பட்டையை சேர்ந்த முத்துக்காலாடி என்பவருக்கும் மாரியம்மாளுக்கும்இடையே கள்ள தொடர்பு இருந்துள்ளது. காலப் போக்கல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மாரியம்மாளின் நடத்தையில் சந்தேகமடைந்த முத்துக்காலாடி, தனியாக மாரியம்மாளை தோட்டத்திற்கு வரவைத்து கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது நண்பர் சுப்பையா உதவியுடன் மாரியம்மாள் சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ரயில் தண்டவாளம் அருகே காட்டுப்பகுதியில் வீசியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரை போலீசார் கைது செய்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!