உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம் : மருத்துவமனை மூடல்.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 1:58 pm
youth
Quick Share

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம் : மருத்துவமனை மூடல்.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!

சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரத்தில் உள்ள பம்மல் டிபி ஜெயின் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் போதிய வசதிகள் இல்லை என்பது கண்டறியப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்களும் மருத்துவமனையில் இல்லை என்றும் மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: என்னோட சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படாததால் டாஸ்மாக் பார் ஆக மாறியுள்ளது : வானதி சீனிவாசன் வருத்தம்!

அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து கையெழுத்து பெறவில்லை என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 454

0

0