திருமண வீடு துக்க வீடாக மாறிய சோகம்.. காதலியுடன் சென்ற ஜீப் 100 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2025, 2:13 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதியான பெருமாள் மலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அடுக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்லத்துரை அவருடைய மகன் ராஜசேகர் வயது 25.

இவருடைய தங்கைக்கு நேற்று திருமணம் முடிந்த நிலையில் இன்று காலை ராஜசேகர், சாய்பாபா காலனியில் வசித்து வரும் தனது காதலி தீபிகா (வயது 22) உடன் தன்னுடைய தோட்டத்திற்கு சுமார் எட்டு முப்பது மணி அளவில் தனது வாகனத்தில் சென்றுள்ளார்,

அப்போது எதிர்பாராத விதமாக ராஜசேகர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில் காதலி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தைப் பற்றி கொடைக்கானல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், 100 அடி பள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்த தீபிகாவை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் காதலன் ராஜசேகர் படுகாயங்களுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவரை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் நேற்று ராஜசேகர் வீட்டில் திருமணம் முடிந்த நிலையில் இன்று அவருடைய வீட்டில் இது போன்ற ஒரு துயர சம்பவம் ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!