கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி.. காப்பாற்ற சென்றவர் தவறி விழுந்ததால் ஷாக்.. வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2024, 2:46 pm

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி. அவருக்கு வயது 42, இன்று மாலை அவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று 100 அடி ஆழமுள்ள அவரது வீட்டு கிணற்றில் விழுந்துள்ளது.

அதனை மீட்பதற்காக கார்த்தி கிணற்றுக்குள் இறங்கியபோது தவறி 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இது தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் நிலைய அலுவலர் கார்த்திகேசன், சுரேஷ்குமார், சதீஷ் கண்ணன் வேல்முருகன் மோகன்ராஜ் உள்ளிட்ட துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கத்தனர்.

மேலும் ஆட்டுக்குட்டியையும் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!