முகநூலில் வந்த போட்டோ.. பறிபோன காதலியின் உயிர் : காதலன் வெறிச்செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2025, 5:59 pm

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதி சேர்ந்த கண்ணன். இவருக்கு இரண்டு மகள்ககள் உள்ளனர். முதல் மகள் கோவை தனியார் கல்லூரியில் பி எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது குடும்பத்தாரும், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணி புரியும் பிரவீன் என்பவரது குடும்பத்தாரும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒன்றாக வடுகபாளையம் செல்லமுத்து நகரில் குடியிருந்துள்ளனர்.

இதையும் படியுங்க: மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து பலி.? துருவி துருவி விசாரிக்கும் போலீசார்!

ஓராண்டுக்கு முன்பு பிரவீன் குடும்பத்தார் பொள்ளாச்சி உடுமலை ரோடு அருகில் குடி பெயர்ந்து உள்ளனர். ஆனால் பிரவீன் கண்ணனின் மூத்த மகளான கல்லூரி மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், மலுமிச்சம்பட்டி நேரு மகா வித்யாலயா காலேஜ் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவி தனது முகநூலில் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பிரவீன் கல்லூரி மாணவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் கோவம் அடைந்த பிரவீன் மாணவி இருக்கும் வீட்டிற்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளதாகவும் இதில் மயக்கம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் மாணவியின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை குறித்து ஏ எஸ் பி சிருஷ்டி சிங் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The life of a lost girlfriend: The boyfriend's act of madness

இந்நிலையில் நிதி நிறுவன ஊழியர் பிரவீன் மேற்கு காவல் நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளார். கல்லூரி மாணவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!