முதலமைச்சர் வரும் நேரத்தில் அமைச்சர் பிடிஆருக்கு நெருக்கமானவர் கட்சியில் இருந்து நீக்கம்… அதிர்ச்சியில் மதுரை திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2025, 11:26 am

ஜூன் 1ஆம் தேதி மதுரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தருகிறார். அவர் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதனால் மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் ஆகியோர் கடந்த மே 23ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். ஆனால் அதே நாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்தினார் மேயர் இந்திராணி.

இதையும் படியுங்க: சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பிரபல தனியார் மருத்துவமனையில் கொடூரம்!

ஒரே நாள் ஒரே நேரத்தில் கவுன்சிலர் கூட்டத்தை மேயர் கூட்டியதால், பல கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால் இந்த கூட்டத்தை அதிமுக ஆதரவுடன் நடத்தி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னணியில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உள்ளதாக கூறப்பட்டது. அவர் மீது புகார்களும் எழுந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக பொன் வசந்த்தை தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The mayor's action against the party... Minister PTR's supporter removed from DMK

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நெருக்கமான ஆதரவாளராக பொன் வசந்த் அறியப்படுகிறார். முதலமைச்சர் வரும் சமயத்தில் அமைச்சரின் ஆதரவாளர் நீக்கப்பட்டுள்ள மதுரை திமுகவுக்குள் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!