பென்சில் முனையில் உலக நாடுகள்..! சாதனை படைத்த கோவை இளைஞர்..!

20 July 2021, 3:25 pm
Pencil Art -Updatenews360
Quick Share

பென்சில் முனையில் தலைவர்கள் பலரின் உருவப்படங்கள், புகழ்மிக்க இடங்களில் வடிவ அமைப்புகள் செதுக்கி சாதனை படைத்தவர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அந்த வகையில், கோவையை சேர்ந்த இளைஞர் ஆனந்தகுமார் 48 நாடுகளின் பெயர்களை ஆங்கிலத்தில் பென்சில் முனையில் செதுக்கியுள்ளார்.

இவர் உலக நாடுகள் பெயரை செதுக்கியிருக்கும் பென்சிலின் அளவு தான் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. சாதரண கண்களால் காணமுடியாத 0.7 மில்லி மீட்டர் அளவுடைய நுண்ணிய பென்சிலில் இந்த பெயர்களை செதுக்கியிருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஓவ்வொருமுறை பென்சில் முனை உடைந்த போதிலும், தனது விடாமுயற்சியின் பிரதிபலனாக இந்த சாதனையை செய்துள்ளார் ஆனந்தகுமார். இவரது சாதனை தொடர்ந்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார் ஆனந்தகுமார்.

வித்தியாசமான முயற்சிகளையும் அதன் வழியே கிடைக்கும் வெற்றியையும் உலகம் என்றும் போற்றிப்புகழ மறந்ததில்லை என்ற வகையில், ஆனந்தகுமாரின் சாதனைகளும் உலகம் பேசும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Views: - 149

0

0