வீடு இடிந்து விழுந்து விபத்து : நெஞ்சை உறைய வைத்த காட்சி!!

7 September 2020, 6:45 pm
Ooty House Destroy - updatenews360
Quick Share

நீலகிரி : குன்னூரில் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷடவசமாக பெண் ஒருவர் உயிர் தப்பினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழைப் பெய்யத் துவங்கியது. சுமார் இரண்டு மணி நேரம் பெய்த இந்த மழைக்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறுகிய நேரத்தில் நகர் பகுதியில் 31 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியது.

இந்த நிலையில் கனமழை காரணமாக குன்னூர் அம்பேத்கர் நகர் பகுதியில் கலா என்பவர் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் குடியிருந்த 50 வயதுடைய கலாமணி என்ற பெண்மணி உயிர்தப்பித்தார்.

மழையில் வீடு இடிந்து விழுந்த நேரடி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பான வீடுகள் ஆற்றின் ஓரத்தில் இருப்பதால் மழைக்காலத்தில் பாதுகாப்புடன் இருக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 6

0

0