கிராமத்தில் உலாவும் 3 சிறுத்தைக் குட்டிகள்.!!

23 May 2020, 1:45 pm
Ooty Leopard -Updatenews360
Quick Share

நீலகிரி : கோழிக்கரை பகுதியில் 3 சிறுத்தைக் குட்டிகள் உலாவுவதால் தாய் சிறுத்தை எந்நேரமும் வரலாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் இத்தலார் கோழிக்கரைப் பகுதியில் தாயில்லாமல் 3 சிறுத்தை குட்டிகள் மட்டும் இங்குள்ள சோலைப் பகுதியில் காணப்படுவதால், தாய் சிறுத்தை வர வாய்ப்புள்ளதால் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் இத்தலார் பகுதியில் உள்ள கோழிக்கரை கிராமத்தை சுற்றியும் சோலைப் பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த வழியாக சென்ற கிராம மக்களுக்கு சிறுத்தை உறும்பும் சத்தம் கேட்டுள்ளது.

அருகில் சென்று பார்த்த போது மூன்று சிறுத்தை குட்டிகள் தாயில்லாமல் படுத்துகிடப்பதைப் பார்த்து தங்களது செல் போனில் படம் எடுத்தனர். தாய்சிறுத்தை எந்த நேரத்திலும் வர வாய்ப்புள்ளதால் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிராமத்தில் உலாவும் 3 சிறுத்தைக் குட்டிகள்.!!

கிராமத்தில் உலாவும் 3 சிறுத்தைக் குட்டிகள்.!!மேலும் பல செய்திகளை தெரிந்துகொள்ள -https://www.updatenews360.com/

Update News 360 यांनी वर पोस्ट केले शनिवार, २३ मे, २०२०