சாலையோரம் வந்த ராட்சத புலி : வாகன ஓட்டிகள் அச்சம்!!

20 September 2020, 2:13 pm
Ooty Tiger - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகை அருகே அப்பர் பவானி வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்த புலியால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.

நீலகிரி மாவட்டம் 58 சதவீதம் வனங்களால் சூழ்ந்த பகுதியாகும். இங்கு புலி, சிறுத்தை, காட்டுமாடு, கடமான் மற்றும் செந்நாய் போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் உதகை அருகே அப்பர் பவானி வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று சாலையோரம் ஒய்யாரமாக நடந்து, பின்னர் உட்கார்ந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை வன விலங்கு புகைப்பட கலைஞர் ஒருவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.