தமிழகத்தில் சுங்கச்சாவடி எண்ணிக்கை விரைவில் குறைப்பு : அமைச்சர் எ.வ. வேலு உறுதி!!!

15 July 2021, 3:31 pm
Quick Share

சேலம்: தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க. நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை மற்றும். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மேலும் சாலை விபத்துகளை தடுக்க இரண்டு வழி சாலைகள், நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் எனவும் கூறினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க 2 வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என்றும், குறிப்பாக சேலம் உளுந்தூர்பேட்டை நான்கு வழி சாலை 20 இடங்களில் இரண்டு வழி சாலையாக உள்ளதாகவும், இதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் .என்றும் உறுதியளித்தார்.

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் குறித்து பொறியாளர் குழு ஆய்வு செய்து வருவதாகவும், இந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும்,10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராம சாலைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். எட்டுவழிச்சாலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எட்டுவழிச்சாலை என்பது கொள்கை முடிவு எனவே அதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று பதிலளித்தார்.

Views: - 177

0

0