அரசு மருத்துவமனையில் தடுப்பூசிகளை திருடி வீட்டில் பதுக்கி வைத்த செவிலியர் : அதிக விலைக்கு விற்பனை செய்தது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2021, 3:28 pm
Vaccine Seized - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : அரசு மருத்துவமனையில் இருந்து கோவாக்சின் தடுப்பூசிகளை வீட்டில் பதுக்கி வைத்த செவிலியர் அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யனார் நகரைச் சேர்ந்த 50 வயதான தனலட்சுமி. இவர் கரூர் தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இன்று வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரிக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சுகாதாரத் துறையினர் அனைவரும் ஒட்டன்சத்திரம் சாலை அய்யனார் நகரில் உள்ள செவிலியர் தனலட்சுமியின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது தனலட்சுமியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கோவாக்சின் மருந்து பாட்டில்களை வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி தலைமையிலான சுகாதாரத் துறையினர் கைப்பற்றினர்.

இது குறித்து வட்டார மருத்துவர் பொன் மகேஸ்வரி மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். தடுப்பு மருந்து கிடைக்காமல் மக்களும் அரசும் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து தெரியாமல் மருந்து பாட்டில்களை எடுத்து வந்து வீட்டில் பதுக்கி வைத்திருந்தது.

மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் அம்பலமானது. இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 284

0

0