எம்எல்ஏவை மறித்து புகார் கூறிய மூதாட்டி : காரில் அழைத்து சென்று நேரில் விசாரித்து உடனே நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2021, 5:40 pm
Dmk Mla Helps- Updatenews360
Quick Share

திருப்பூர் : சட்டமன்ற உறுப்பினரின் காரை மறித்து, ரேஷன் கடையில் முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய மூதாட்டியை காரில் அழைத்துச் சென்ற எம்எல்ஏ ரேஷன் கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வரும் பணிகளை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுப் பணிக்கு வரும் போது சட்டமன்ற உறுப்பினரின் காரை வழிமறித்த மூதாட்டி கன்னியம்மாள் திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை எனவும் இதை கேட்டால் தரக்குறைவாக ரேஷன் கடை ஊழியர்கள் பேசி, தன்னை தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார் .

உடனடியாக அந்த மூதாட்டியை, தனது காரில் ஏற்றிச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் ரேசன் கடைக்குச் சென்று, அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

உடனடியாக முறையாக பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அங்கேயே இருந்து கன்னியம்மாளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மேலும் தனது சொந்த பணத்தை உதவித்தொகையாக கொடுத்து எப்போது பிரச்சனை என்றாலும் தங்களை அழைக்கவும் என ஆறுதல் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 769

0

0