தின்பண்டங்கள் வாங்க வந்த லாட்ஜ் உரிமையாளர் வெட்டிப்படுகொலை : கேரள எண் பதிவு கொண்ட ஜீப்பில் வந்த மர்மநபர்கள் வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 5:49 pm

போடி தலைமை தபால் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய பகுதியில் ராதா லாட்ஜ் உரிமையாளர் ராதா என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியான தலைமை தபால் நிலையம், சவுண்டிஸ்வரி பள்ளிக்கூடம் அருகே முறுக்கு, அதிரசம் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த ராதா லாட்ஜ் உரிமையாளர் ராதா வந்திருந்தார்.

அப்போது கேரள எண் பதிவு கொண்ட ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து மறித்து வைத்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். சரமாரியான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ராதா சம்பவ இடத்திலே துடி துடித்து உயிர் இழந்தார்.

பட்டப் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடிய கூடிய பகுதியில் லாட்ஜின் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போடி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வெற்றி தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!