வாடகை தராததால் பேக்கரியை அடித்து நொறுக்கிய உரிமையாளர்! பாதிக்கப்பட்டவர் மனு!!

3 September 2020, 11:46 am
Bakery Loot - Updatenews360
Quick Share

கோவை: வாடகை பாக்கி தராததால் கடையின் உரிமையாளர் ஒருவர் தனது கடையில் பேக்கரி நடத்தி வந்தவரின் கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது 45 இவர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அதில் தான் மதுக்கரை பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வருவதாகவும். கொரோனா வைரசால் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 4 மாதமாக பேக்கரி அடைக்கப்பட்டு இருந்தகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், கடை உரிமையாளர் வாடகை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் இரண்டு மாதம் அவகாசம் கேட்டும் அதனை மறுத்து பேக்கிரியை அடித்து உடைத்து நொறுக்கியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0