ஓசியில் மதுபானம் தராததால் ஆத்திரம்… ஸ்கெட்ச் போட்டு பாட்டில்களை கொள்ளையடித்த நபர்…!!

Author: Udhayakumar Raman
28 November 2021, 3:56 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் மதுபான கடையில் ஓசியில் மதுபான கேட்டு தர மறுத்ததையடுத்து மதுபான பாட்டிலை பெட்டியுடன் திருடி செல்லும் நபரை சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் தனியார் மதுபான கடை இயங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வந்த ஒருவர் கடை விற்பனையாளரிடம் ஓசிக்கு மது கேட்டுள்ளார். இதற்கு விற்பனையாளர் மறுத்துள்ளார். இதனையடுத்து அவர் கடையின் உள்ளே சென்று மது அருந்துபவர்களுக்கு வேண்டிய மதுபானங்களை கொடுத்துவிட்டு வருவதற்குள் அந்த நபர் கடையில் இருந்த மதுபானத்தை பெட்டியுடன் தூங்கி சென்றுள்ளார். இது அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையின் மேலாளர் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து மதுபானங்களை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன்பு இதே மதுபான கடையில் மாமூல் கேட்டு காசாளரை பிரபல ரவுடி புலியங்கொட்டை ரங்கராஜ் வெட்டினர், என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 287

0

0