ஒரு வழியாக சிக்கிய லுங்கி திருடன் : மரக்கடையில் பணம் கொள்ளையடித்தவர் கைது!!

3 July 2021, 5:10 pm
SAthy Theft- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியில் மரக் கடையில் புகுந்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி கடந்த 28ஆம் தேதி கோவை சாலையில் உள்ள மரக்கடையின் உள்ளே புகுந்து கல்லாவில் உள்ள பணம் 95 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்தார்.

இது தொடர்பாக சிசிடிவி காட்சி வைத்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வலைவீசி தேடி வந்த நிலையில் இன்று அந்த மர்ம நபரை புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் பணத்தை திருடிய நபர் கோவை மாவட்டம் அன்னூர் உப்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பதும் இவர் பல திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவரை கைது செய்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 163

0

0