அதை பண்ணு இல்லாட்டி சுட்டுடுவோம்.. முதல்வர் மற்றும் எஸ்பிக்கு கொலை மிரட்டல் கடிதம்..!

Author: Vignesh
12 August 2024, 11:04 am

தமிழக முதல்வர் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்பிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் முன் விரோதம் காரணமாக இளவரசன் என்பவரின் பெயரில் கடிதம் அனுப்பியது விசாரணையில் அம்பலமானது.

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு இளவரசன் என்பவரின் பெயரில் கடிதம் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தில், கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் சாவு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். இல்லை என்றால், தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் ஆகியவர்களை சுட்டு கொன்று விடுவோம் எனவும், கள்ளக்குறிச்சியில் உள்ள கட்சி அலுவலகம், டாஸ்மாக் கடைகள், எஸ்பி ஆபிஸ் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், மாவட்ட எஸ்பிஐ அவரது அலுவலகத்தில் உள்ளே புகுந்து சுட்டு விடுவோம் எனவும் மிரட்டல் கடிதம் இளவரசன் என்ற பெயரில் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கடிதம் தஞ்சாவூர் மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் தஞ்சாவூர் விரைந்த காவல்துறையினர், கடிதத்தை வைத்து இளவரசன் என்பவரை காவல் துறையினர் தீவிர விசாரணை செய்ததில் இந்த கடிதம் நான் அனுப்பவில்லை என கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து இளவரசனின் முன் பகையாளர்களை பிடித்து விசாரணை செய்து வந்தனர். இதனையடுத்து, இளவரசனின் முன்பகையாளரான தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தம்பிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவரை தீவிர விசாரணை செய்ததில் இளவரசன் என்பவரின் பெயரில் முன் விரோதம் காரணமாக கடிதம் அனுப்பியது. விசாரணையில், தெரிய வந்ததை தொடர்ந்து கோடீஸ்வரனை கள்ளக்குறிச்சி போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Nayanthara Wikki Compared with Pushpa Purushan புஷ்பா புருஷன் தான் விக்னேஷ் சிவன்.. நயன்தாராவை அசிங்கப்படுத்திய அவலம்!
  • Views: - 239

    0

    0