வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய 38 வயது நபர் கைது!

21 July 2021, 8:58 pm
Quick Share

சென்னை: தமிழர் முன்னேற்றப் படை என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமிக்கு கடந்த மார்ச் மாதம் முதல் அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோக்கள் வருவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆபாச வீடியோ அனுப்பியவர்களை மூன்று நாட்களில் கைது செய்ய வேண்டும்; இல்லை என்றால் அவர்களை நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டிவைத்து பிறப்புறுப்பை அறுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் விமான நிலையம் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி அவர் ஆபாச வீடியோ அனுப்பியவரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவருக்கு மீண்டும் முகநூல் பக்கத்தில் ஆபாச வீடியோ வந்தது. இது குறித்து காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்தார்.சமீபத்தில் மேலும் ஒரு வீடியோவை வெளியிட்ட வீரலட்சுமி, ஆபாச வீடியோ அனுப்பியவர்கள் நீதிமன்றத்தில் காவல் நிலையத்தில் சரண் அடைந்து விடுங்கள்; இல்லை என்றால் என்னிடம் சிக்கினால் உங்கள் ஆணுறுப்பை அறுத்து விடுவேன் . எனக்குள்ள அரசியல் பலம் ,படை பலம் ,பண பலம் வைத்து நான் நீதிமன்றத்தில் நீதி பெற்றுக்கொள்கிறேன். சாதாரணப் பெண்ணுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அவிழ்த்துப் போட்டு ஆடுவோர் புகார் அளித்தால் அமைச்சர் என்றாலும் கைது செய்கிறார்கள்; தமிழ் பெண்னின் மானம் அவ்வளவு கேவலமாக போய் விட்டதா என பேசி இருந்தார்.

இந்நிலையில் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் ஆண்டிமடத்தை சேர்ந்த ட்ரில்லிங் மிஷின் ஆப்ரேட்டர் ஆரோக்கியசாமி (38) கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புரத்தில் கைதான ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வீரலட்சுமியின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 68

0

0