‘யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞர்’ : அதிரடி காட்டிய போலீசார்..!

Author: Udhayakumar Raman
28 June 2021, 11:18 pm
Quick Share

கோவை: யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கொரோனா பரவலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அடைக் கப்பட்டுள்ளன. இந்த நிலையில் போதைக்காக கஞ்சா உள்ளிட்டவற் றை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மோகன் நாயர். இவர் வீட்டில் யூடியூப் சேனல் பார்த்து குக்கரை வைத்து சாராயம் காய்ச்சி அதனை அருகில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விளையாட்டு மைதானத்தில் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் வீட்டில் சோதனையிட்டபோது குக்கர் மற்றும் மது பாட்டில்களில் சாராயத்தை காய்ச்சி அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்தது உறுதியானது இதையடுத்து அவரை கைது செய்து, சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 617

1

1