எம்ஜிஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் இப்போது உள்ளவர்களிடம் இல்லை : தேனியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 11:46 am
CM Stalin - Updatenews360
Quick Share

தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை தொடங்கப்படும் என பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று தேனி மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதில், ரூ.114.21 கோடியில் புதிய திட்ட பணிகளை தொடக்கி வைத்தார்.

ஊஞ்சம்பட்டியில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினர். இதுபோன்று ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடந்து முடிந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். 20 ஆயிரத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதன்பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக ஆட்சியில் தேனி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ரூ.71 கோடி மதிப்பிலான திட்ட உதவிகளை 10,400 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அனைத்து திட்டங்களும், அனைத்து மக்களையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட மக்களின் கனவு திட்டமான 18 ஆம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசு. தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை தொடங்கப்படும் என அறிவித்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனை ரூ.8 கோடியில் மேம்படுத்தப்படும். உத்தப்பாளையம் அரசு மருத்துவமனை ரூ.4 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் எனவும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டதாரியாக வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்.

பெண் கல்விக்கு எதிரான அனைத்து தடைகளையும் தகர்தெறிந்தோம். உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மானுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடனை தள்ளுபடி செய்துள்ளோம்.

தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் இலங்கை தமிழர்களுக்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்றினோம். 91% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு சேவை செய்வதற்கே நேரம் போதுமானதாக இல்லை. எனவே விமர்சனத்திற்கு பதில் தர விரும்பவில்லை. எம்.ஜி.ஆர் இடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது உள்ளவர்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Views: - 604

0

0