தொடரும் உக்ரைன்-ரஷ்யா போர்…தாறுமாறாக விலை உயரும் ஆபரணத் தங்கம்: சவரன் ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது..!!

Author: Rajesh
5 மார்ச் 2022, 10:49 காலை
Quick Share

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.774 அதிகரித்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உக்ரைன் போர் சூழல் காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டிருந்தது. கடந்த மாதம் 24ம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,856 ரூபாய் உயர்ந்து 39,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 232 ரூபாய் உயர்ந்து 4,951 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 72.70 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதற்கடுத்த இரண்டு நாட்களில் நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 568 ரூபாய் குறைந்து 37,904 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து 4,738 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 69 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 776 ரூபாய் அதிகரித்து 39,760 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 97 ரூபாய் குறைந்து 4,970 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து 73.40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த மாதம் 24ம் தேதி தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை நெருங்கிய நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 1958

    0

    0