ரசிகர் மன்ற நிதியில் இலவச வீடு கட்டி கொடுத்துவிட்டு விஜய் கட்டியது போல பாவலா காட்டுவதா? புஸ்ஸி ஆனந்திடம் விழுந்த கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2024, 2:29 pm

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பழங்குடியின மக்கள் இரண்டு குடும்பங்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில்
கட்டித் தரப்பட்ட வீடுகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும அவர்களின் குடும்பத்திற்கு தேவையான சமையல் எரிவாயு, அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், காய்கறி அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்கனவே 10 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாகவும் தற்போது இரண்டு வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும் தளபதி விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாகவும் பேசினார்.

உடனே செய்தியாளர் ஒருவர், ரசிகர் மன்ற பணத்தில் தான் வீடு கட்டியதாக சொல்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

அப்போது கூடி இருந்த ரசிகர்கள் குரல் எழுப்பியவாறு அவரை முந்தி அடித்துக்கொண்டு அழைத்துச் சென்றனர். ரசிகர் மன்றத்தினர் அவர்கள் வழங்கிய பணத்தில் வீடு கட்டியதாக ரசிகர்கள் தெரிவித்த நிலையில் தளபதி விஜய் இலவச வீடு என புஸ்ஷி ஆனந்த் தெரிவித்ததால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  • Kamal haasan decided to not act in other companies இதுதான் என்னோட கடைசி படம்-திடீர் முடிவெடுத்த கமல்ஹாசன்? பகீர் கிளப்பும் தகவல்…