கொரோனா சிகிச்சைக்கு சென்றவரின் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!

6 August 2020, 10:40 am
Corona Cbe - Updatenews360
Quick Share

கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா சிகிச்சைக்கு சென்றவரின் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிணத்துக்கடவு பகுதியை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத் (41). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த மாதம் 24ம் தேதி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். மேலும், வீட்டில் இருந்த தங்க மோதிரம், காதணி உட்பட 3 பவுன் நகை மற்றும், வீட்டில் இருந்த எல்.சி.டி டீவி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

சிகிச்சை முடிந்த பிரசாத் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது இந்த கொள்ளை சம்பம் நடந்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த மர்ம நபர்கள் அவது வீட்டில் கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 23

0

0