சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த வெங்காய வியாபாரி… சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சிக்கிய பஞ்சாப் இளைஞர்.!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2023, 1:09 pm

சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த வெங்காய வியாபாரி… சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சிக்கிய பஞ்சாப் இளைஞர்.!!!

கோவையில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் வியாபாரி உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று செல்வபுரம் போலீசார் அந்தப் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது பேரூர் மெயின் ரோடு தில்லை நகர் ஜங்ஷனில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 13 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தொண்டாமுத்தூர் ஓணாபாளையத்தை சேர்ந்த வெங்காய வியாபாரி ரசல் பிரான்சிஸ் (32), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்தர் சிங்(30) ஆகிய இருவரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கினார்கள்? அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?