வலிமை படத்தின் சிங்கிள் இன்று வெளியாகிறது : யாரோட குரல் தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

Author: Udayachandran
2 August 2021, 1:15 pm
Valimai Single Voice - Updatenews360
Quick Share

வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் வரிகள் இன்று இரவு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் update குறித்து ரசிகர்கள் பல மாதம் காத்திருந்த நிலையில், கடந்த மாதம் மோஷன் பிக்சர் வெளியாகி படு வைரலானது. மோசன் பிக்சருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தந்தது.

இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வலிமை படத்தின் முதல் பாடல் வரிகள் இன்று இரவு ரிலீசாக உள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்.

மேலும் படத்தின் முதல் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஆனால், இந்த பாடலை யார் பாடியுள்ளார் என்று ரசிகர்களுக்கு மத்தியில் கேள்விகள் எழும்பியுள்ளது. அந்த வகையில், ஒரு பக்கம் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், மற்றோரு பக்கம் யுவன் ஷங்கர் ராஜா படியுள்ளதாவும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Views: - 344

3

2