மதுவில் கள்ளக்காதலனுடன் மயங்கிய அக்கா : பக்காவாக ஸ்கெட்ச் போட்ட தம்பி… கம்பி எண்ணும் பரிதாப கதை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2021, 5:38 pm
Drinks And Murder - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : திருமணமான தன் அக்காவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரை பீர் பாட்டிலால் குத்தி அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு நண்பருடன் தப்பி ஓட்டம் பிடித்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் சின்னயங்குளம் காமாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் ஷீலா (வயது 33). இவருடைய கணவர் வரதன் .இவர்களுக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடைய பூர்வீகம் ராஜபாளையம்.

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் கனகராஜ் (வயது 46). இவருடைய மனைவி பெயர் பானுமதி. இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உண்டு. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் தாம்பரத்தில் வசித்து வருகின்றார்.

கனகராஜ் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் அரிசி ஆலைகளில் அரிசி வாங்கி விட்டு பணம் தராமல் ஏமாற்றுவது போன்ற சீட்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது திருவள்ளூர் திருவண்ணாமலை , ஆரணி போன்ற பகுதிகளில் அரிசி கடத்தல் வழக்கு உள்ளது.

ஷீலா என்பவருடன் கனகராஜ்க்கு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஷீலாவிற்க்கு மது அருந்தும் பழக்கத்தை கடந்த பத்தாண்டு காலமாக கனகராஜ் ஏற்படுத்தி உள்ளார். மது போதைக்கு அடிமையான ஷீலா கணவன் வரதனை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு கனகராஜ்வுடனே வசித்து வருகிறார்.

காமாட்சி நகர் பகுதி அருகேயே ஷீலாவின் தம்பி ராஜீ வசித்து வருகிறார். இவர் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ராஜீவின் நண்பர் உதயகுமார். இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று நள்ளிரவு கனகராஜும், ஷீலாவும் மது அருந்தும் போது அந்த இடத்துக்கு ராஜீ மற்றும் நண்பர் உதயகுமார் வந்தனர். கனகராஜீவுடன் சேர்ந்து அனைவரும் ஒன்றாக மது அருந்தினார். ஒரு கட்டத்தில் கனகராஜ்ஜை பார்த்து என்னுடைய தங்கையை நீ வைத்துள்ளாயே ? அதற்கு நீ என்ன செய்தாய் என்ற ரீதியில் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆவேசமடைந்த ராஜீ பீர் பாட்டிலை உடைத்து கனகராஜ்ஜை குத்தியுள்ளார் . மேலும் ஆத்திரம் அடங்காமல் அருகே கிடந்த அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொன்றுள்ளார் . மது போதையில் இருந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

ராஜீ மற்றும் அவருடைய நண்பர் உதயகுமார் ஆகிய இருவரும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர். ‌ சம்பவத்தை அறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை உடற்கூறு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்தனர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய ராஜீ மற்றும் உதயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

சுமார் 15 ஆண்டுகளாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்த நபரை அம்மிக்கல் போட்டு கொலை செய்தது கூட அறிய முடியாமல் மதுபோதையில் ஷீலா சிரித்தப்படியே தள்ளாடிக் கொண்டிருந்ததை பார்க்கும் போது இப்படியும் சில பெண்கள் உலகத்தில் உள்ளார்களே என்ற வேதனை மேலோங்கியது.

Views: - 423

0

0