விளையாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பெண் போலீஸ் மகன் : ‘சிம்பிளாக’ குண்டை அகற்றிய அரசு மருத்துவமனை!!

19 April 2021, 5:58 pm
Gun Shoot -Updatenews360
Quick Share

கோவை : கோவையை சேர்ந்த பெண் போலீசின் மகன் விளையாட்டு துப்பாக்கியால் சுட்டு காதுக்குள் குண்டு மாட்டிவிட அதனை அசால்டாக கையாண்டு அகற்றியுள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கணேஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கணேஷ் விளையாட்டு துப்பாக்கி மூலம் தலையில் சுட்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். அப்போது துப்பாக்கியில் இருந்த குண்டு எதிர்பாரத விதமாக சிறுவனின் காதுக்குள் சிக்கிக்கொண்டது.

இதுகுறித்து உடனே அவர் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், காதுக்குள் சிறிய அளவிலான குண்டு சிக்கியிருப்பதை உறுதி செய்தனர்.

செவிப்பறை பாதிக்காத வண்ணம் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, வெறும் தண்ணீரை மட்டும் சிறுவனின் காதுக்குள் பாய்ச்சி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அந்த குண்டை அசால்டாக வெளியேற்றியுள்ளனர்.

சிறிய பிரச்சனை என்றாலும், சிக்கலான சிகிச்சை, லட்சக்கணக்கில் செலவாகும் என்று தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தை எகிற வைக்க, அரசு மருத்துவமனை மருத்துவ குழுவின் இந்த சம்யோஜித யுக்தி பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Views: - 90

5

4