அப்பனாவது சுப்பனாவது.. முன்னாள் கவுன்சிலரை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்த மகன்கள் : சொத்து தகராறால் பெற்ற தந்தைக்கு நேர்ந்த கொடுமை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 2:12 pm

விழுப்புரம் : முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் நகரத்தை சேர்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அகமது இவர் இரண்டு முறை சுயேட்சை நகரமன்ற உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட்டவர், பல்வேறு தொழில்களை செய்து வரும் இவர் ஒப்பந்ததாரராகவும் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் இவரது குடும்பத்தில் உள்ள குடும்பத்தினருக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இவரது மகன்கள் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்க கேட்டதாகவும் கூறப்படுகிறது,
இந்நிலையில் நேற்று நள்ளிரவு காயங்களுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2:00 மணிக்கு மீண்டும் விழுப்புரம் சென்றபோது வெளியே காத்திருந்த மர்மநபர்கள் இவர் சென்ற காரை வழிமறித்து தாக்கியுள்ளனர்.

அங்கிருந்து தப்பி ஓடியவர் விழுப்புரம் சென்றபோதும் அங்கே ஒரு கும்பல் இவரை கொலை செய்ய தயாராக இருந்தது. இவரை கார்களில் வருபவர்கள் மீண்டும் சென்னை சாலையில் வந்த போது காரில் வந்த நபர்கள் வழிமறித்து அவர் கழுத்தை அறுத்தனர்.

மேலும் அங்கிருந்து தப்பி ஓடியவர் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் மயங்கி விழுந்துள்ளார் காலை அப்பகுதி மக்கள் பார்த்து இவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிருக்கு போராடிவரும் நிலையில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அப்போது பேசிய அவர் தன்னுடைய மகன்கள் என்னை கொலை செய்ய கழுத்தை அறுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த போது ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!