4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை: வருவாய்த்துறை மானியம் மீது விவாதம்..!!

Author: Rajesh
18 April 2022, 8:56 am

சென்னை: 4 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் மானிய கோரிக்கைகள் மிதான விவாதம் நடைபெற்று வந்தது. கடந்த 13ம் தேதி வேளாண்மை, மீன் வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்பு துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.

விவாதத்துக்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் அளித்து, துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். தொடர்ந்து வருகிற மே மாதம் 10ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த சட்டசபை கூட்டத் தொடரில் தமிழக அரசு சார்பில் சில முக்கியமான சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?