அரசு பள்ளியில் தாமதமாக வந்த ஆசிரியர்கள்.. ஸ்பாட்டில் வந்த ஆட்சியர் : அதிரடி ஆக்ஷன்.. கிலியில் சக ஆசிரியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 1:35 pm
Collector- Updatenews360
Quick Share

அரசு பள்ளியில் தாமதமாக வந்த ஆசிரியர்கள்.. ஸ்பாட்டில் வந்த ஆட்சியர் : அதிரடி ஆக்ஷன்.. கிலியில் சக ஆசிரியர்கள்!!

விழுப்புரம் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 26 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

அரசு நிகழ்ச்சி ஒன்றிற்கு அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பள்ளி வகுப்பில் மாணவ, மாணவிகள் மட்டுமே இருந்தனர்.

அவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் காலை 9.15 மணி வரை பள்ளிக்கு வராத பள்ளியின் உடைய ஆசிரியர்கள் மாலதி, அங்கையர்கன்னி இருவரையும் இடமாற்றம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆய்வு செய்ய வந்த ஆட்சியர் உடனடியாக இரண்டு ஆசிரியைகளை பணியிடமாற்றம் செய்து ஆக்ஷன் எடுத்த சம்பவம் சக ஆசிரியர்களிடையே கிலியை ஏற்படுத்தியது.

Views: - 470

0

0