விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது.. சட்டமன்ற தேர்தல் வரப்போகுது : அதிமுக அவைத் தலைவர் பரபரப்பு பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 4:12 pm

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்ப்பார்பதாக முன்னாள் அமைச்சர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டி அதிமுக கழக அவைத் தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான தமிழ் மகன் உசேன் இன்று தூத்துக்குடி ஜாமியா பெரிய பள்ளிவாசலில் மலர் போர்வை போர்த்தி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ் மகன் உசேன் கூறுகையில், மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திட வேண்டியும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டியும், கலகத்தின் நிரந்தர பொது செயலாளராக வர வேண்டியும் ஆன்மிக பயணமாக 75 மாவட்டத்தில் உள்ள தர்காக்களில், சிறப்பு பிரார்த்தனை செய்ய இருக்கிறேன். 22வது மாவட்டமாக இங்குள்ள தூத்துக்குடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தேன்.

மீண்டும் தமிழக முதகவராக விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்ட மன்ற தேர்தல் வரும் என எதிர்ப்பார்பதாக கூறினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?