மனைவி செய்த கொடுமையால் மதுவில் எலி பேஸ்ட் கலந்து இளைஞர் எடுத்த விபரீதம் : இறப்பதற்கு முன் வெளியட்ட வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 6:17 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள செம்படை கிராமத்தை சார்ந்த வீரன் மகன் வெற்றிவேல் (வயது 30) என்பவர் கடந்த வியாழக்கிழமை உயிர் இழந்ததாக கூறப்படுகிறது,

இந்த நிலையில் இறப்பதற்கு முன் வெற்றிவேல் மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்துவிட்டு எனது சாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த எனது மனைவி வேம்பு (வயது30) மனைவியின் உறவினர் நான்கு பேர் எனவும், இவர்களிடம் பணம் நகை கொடுத்து ஏமாந்து விட்டதாகும் கூறி உள்ளார்.

மேலும் எனது பிள்ளைகளை பார்க்க சென்றால் மாமியார் மறைத்து வைத்துக் கொள்கிறார் எனக் கூறி கண்ணீருடன் மதுவில் எலி பேஸ்ட் கலந்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

என் சாவிற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீடியோவில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இளைஞர் வெற்றிவேல்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?