உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகன் : இறுதிச் சடங்கில் தந்தை பலியான சோகம்!!

Author: kavin kumar
20 October 2021, 3:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உடல் நலக்குறைவால் மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை மகன் இறுதி சடங்கின் போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி (55), இவரது மனைவி விஜயா, இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு ராஜன் (28) என்ற மகனும் உள்ளனர். பெரியசாமி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார், அதே போல் ராஜனும் கூலி வேலைக்கு சென்று வந்ததுள்ளார்.இதற்கிடையே கடந்த வாரம் ராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அப்போது அவருக்கு மஞ்ச காமாலை இருப்பது தெரியவந்ததௌ அடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரின் தந்தை பெரியசாமி, தாயார் விஜயா மற்றும் உறவினர்கள் துக்கத்தில் இருந்து வந்த நிலையில் ராஜனின் இறுதிச்சடங்கு நேற்று வீட்டில் நடந்தது. அப்போது திடீரென பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பெரியசாமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மகன் இறந்த துக்கத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 287

0

0